Tuesday, October 22, 2019

தினை முறுக்கு







தேவையான பொருள்கள்:
  1. தினை                                      -           1 கப் 
  2. அரிசிமாவு                           -           1 கப் 
  3. பொட்டுக்கடலை மாவு     -          2டீஸ்பூன்
  4. பெருங்காயத்தூள்              -          2 டீஸ்பூன்
  5. உப்பு                                       -          தேவையான அளவு 
  6. மிளகாய் தூள்                      -          3 டீஸ்பூன்
  7. சீரகம்                                     -          2 டீஸ்பூன்
  8. பட்டர்                                     -         1 டீஸ்பூன்
  9. எண்ணெய்                            -         தேவையான அளவு  

செய்முறை:
  • தினையை  கழுவி 1 மணி நேரம் ஊற வைத்து , முறுக்கு மாவு அரைப்பது போல் தண்ணீரை வடித்து 20 நிமிடங்கள் உலர்த்தி மிக்சியில்  எடுத்துக்கொள்ளவும்.
  • அரைத்த தினை  மாவில் சரிக்கு சரி அரிசி மாவு சேர்த்தது கொண்டு,பொட்டுக்கடலை மாவு  2 டீஸ்பூன், உப்பு ,சீரகம், பெருகாயத்தூள், பட்டர் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளும்.
  • முறுக்கு மாவு பிசையும் பதத்திற்கு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் கடாயில் முறுக்கு சுடுவதற்கு ஏற்ப எண்ணெய் சேர்த்து காய விடவும்.
  • எண்ணெய் நன்கு காய்ந்ததும் முறுக்கு உழக்கில் நம் விருப்பத்திற்கு ஏற்ப அச்சு போட்டு  பிசைந்து வைத்துள்ள மாவை அதில் வைத்து முறுக்கை எண்ணெயில் கவனமாக பிழிந்து கொள்ளவும்.
  • ஒரு பக்கம் நன்கு  சிவந்து வெந்ததும் மறுப்பக்கம் திருப்பி போட்டு வேக விடவும்.
  • இரண்டு பக்கம் நன்கு சிவந்து வெந்ததும் முறுக்கை எடுத்து பரிமாறவும்.
  • சுவையான சத்து நிறைந்த, உடலுக்கு சத்து  தரக்கூடிய தினை  முறுக்கு தயார்.

Monday, October 21, 2019

கம்பு முறுக்கு





தேவையான பொருள்கள்:


  1. கம்பு                                           -           1 கப் 
  2. அரிசிமாவு                           -           1 கப் 
  3. பொட்டுக்கடலை மாவு     -          2டீஸ்பூன்
  4. பெருங்காயத்தூள்              -          2 டீஸ்பூன்
  5. உப்பு                                       -          தேவையான அளவு 
  6. மிளகாய் தூள்                      -          3 டீஸ்பூன்
  7. சீரகம்                                     -          2 டீஸ்பூன்
  8. பட்டர்                                     -         1 டீஸ்பூன்
  9. எண்ணெய்                            -         தேவையான அளவு  

செய்முறை:
  • கம்பை கழுவி 1மணி நேரம் ஊற வைத்து , முறுக்கு மாவு அரைப்பது போல் தண்ணீரை வடித்து 20 நிமிடங்கள் உலர்த்தி மிக்சியில்  எடுத்துக்கொள்ளவும்.
  • அரைத்த கம்பு மாவில் சரிக்கு சரி அரிசி மாவு சேர்த்தது கொண்டு,பொட்டுக்கடலை மாவு  2 டீஸ்பூன், உப்பு ,சீரகம், பெருகாயத்தூள், பட்டர் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளும்.
  • முறுக்கு மாவு பிசையும் பதத்திற்கு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் கடாயில் முறுக்கு சுடுவதற்கு ஏற்ப எண்ணெய் சேர்த்து காய விடவும்.
  • எண்ணெய் நன்கு காய்ந்ததும் முறுக்கு உழக்கில் நம் விருப்பத்திற்கு ஏற்ப அச்சு போட்டு  பிசைந்து வைத்துள்ள மாவை அதில் வைத்து முறுக்கை எண்ணெயில் கவனமாக பிழிந்து கொள்ளவும்.
  • ஒரு பக்கம் நன்கு  சிவந்து வெந்ததும் மறுப்பக்கம் திருப்பி போட்டு வேக விடவும்.
  • இரண்டு பக்கம் நன்கு சிவந்து வெந்ததும் முறுக்கை எடுத்து பரிமாறவும்.
  • சுவையான சத்து நிறைந்த, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய கம்பு முறுக்கு தயார்.








Saturday, October 19, 2019

தினை லட்டு



தேவையான பொருள்கள்:


  1. தினை அரிசி                    -           1 கப் 
  2. பாசிப்பருப்பு                    -            1/4 கப் 
  3. கருப்பட்டி                        -            3/4 கப் 
  4. நெய்                                  -            தேவையான அளவு 
  5. முந்திரி                             -          10
  6. திராட்சை                         -           5
  7. ஏலக்காய்                         -           3

செய்முறை:

  • தினைஅரிசியை சுத்தம் செய்து வெறும் கடாயில் சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பாசிப்பருப்பையும் அதே போல் வறுத்து கொள்ளவும். சூடு ஆற விட்டு மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும்.
  • கடாயில்  1/2 கப் தண்ணீர், கருப்பட்டி இரண்டும்  சேர்த்து நன்கு கரையும் வரை   கொதிக்க  வைக்கவும்.
  •  தண்ணீர் நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து  வடிக்கட்டி கொள்ளவும்.
  • நெய்யை  கடாயில் ஊற்றி காய்ச்சி கொள்ளவும்.
  • முந்திரி, திராட்சையை நெயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • ஏலக்காயை பொடித்து வைத்து கொள்ளவும்.
  • கருப்பட்டி காய்ச்சிய தண்ணீரில், அரைத்து வைத்துள்ள தினை,பாசிப்பருப்பு மாவை  போட்டு கலந்து கொள்ளவும்.
  • பிறகு காய்ச்சி வைத்துள்ள நெய்யை சிறிது சிறிதாக கலந்து வைத்துள்ள மாவில்  ஊற்றி  லட்டு பிடிக்கும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • லட்டு பிடிக்கும் பதம் வந்ததும் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, பொடித்து வைத்துள்ள  ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பிறகு அனைத்து மாவையும் நமக்கு தேவையான அளவில் உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  • இப்போது சுவையான,சத்து நிறைந்த தினை லட்டு தயார். 



Wednesday, October 16, 2019

கம்பு லட்டு



தேவையான பொருள்கள்:

  1. கம்பு மாவு                                -            1 கப் 
  2. பச்சைப்பயிறு மாவு             -            1/4 கப் 
  • பேரிச்சம்பழம்                        -           5
  1. முந்திரி                                    -            5
  2. கருப்பட்டி                                -            1/2 கப் 
  3.  வறுத்து பொடித்த எள்         -            1 டீஸ்பூன் 
  4. நெய்                                         -             1 டீஸ்பூன்
  5. பால்                                          -             தேவையான அளவு 
  6.  உப்பு                                         -             ஒரு சிட்டிகை 

செய்முறை:
  • அடுப்பில் வெறும் கடாயில் கம்பு மாவு, பச்சைப்பயிறு மாவு இரெண்டையும்தனி தனியே  வாசம் வரும் வரை அடி பிடிக்காமல் வறுத்து கொள்ளவும்.
  • வறுத்த மாவை மிக்சியில் பொடித்த கருப்பட்டியுடன்  சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளவும்.
  • கடாயில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி,பொடியாக நறுக்கிய பேரிச்சைப்பழத்தை சேர்த்து வறுத்து மாவில் கொட்டவும்.
  • அத்துடன் பொடித்த எள், உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.
  • பாலை காய்ச்சி  பொறுக்கும் சூட்டில் மாவில் கொஞ்சமாக தெளித்து லட்டு பிடிக்கவும்.
  • இதனை 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
  • பாலுக்கு பதில் இன்னும் கோசம் நெய் சேர்த்து லட்டு பிடித்தல் 20 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
  • சுவையான, சத்து நிறைந்த  குளிர்ச்சி தர கூடிய கம்பு லட்டு தயார்.



Tuesday, October 15, 2019

கம்பு கொழுக்கட்டை




தேவையான பொருள்கள்:

  1. கம்பரிசி                                     -      1கப் 
  2. வெங்காயம்                              -      1/2 கப் 
  3. ப.மிளகாய்                                 -      3
  4. கருவேப்பிலை                         -      2  கொத்து 
  5. தேங்காய் துருவியது             -      1/ கப் 
  6.  உப்பு                                          -        தேவையான அளவு 
  7. எண்ணெய்                               -        3 டீஸ்பூன் 
  8. கடுகு,உளுந்தம் பருப்பு        -         1  டீஸ்பூன்
  9. க.பருப்பு                                   -         2 டீஸ்பூன்

செய்முறை:
  • கம்பரிசியை கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு கம்பை மிக்சியில் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
  • அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, கடலை பருப்பு, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  •  வெங்காயம் வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்து வைத்துள்ள கம்பு மாவை சேர்த்து கிளறவும்.
  • மாவில் பச்சை வாசம் போகும் வரை அடிபிடிக்காமல் கிளறி இறக்கவும்.
  • மாவு ஆறியதும் கொழுக்கட்டைகளாக (படத்தில் காட்டியவாறு) பிடித்து கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் சூடானதும் இட்லி தட்டில் பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டையை வைத்து 10 நிமிடங்கள் முடி போட்டு வேக வைத்து கொள்ளவும்.
  • 10 நிமிடம் கழித்து இட்லி பாத்திரத்தை திறந்து கொழுக்கட்டையை எடுத்து சூடாக பரிமாறவும்.
  • சூடான, சுவையான,சத்து நிறைந்த கம்பு கொழுக்கட்டை தயார். 



Thursday, October 10, 2019

கம்பங்கூழ்






தேவையான பொருள்கள்: 


  1. கம்பு                                                                  -          1 கப் 
  2. மோர்                                                                -          2 கப் 
  3. உப்பு                                                                  -          தேவையான அளவு 
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம்            -           1 கைப்பிடி
  5. மோர் மிளகாய்                                             -           தேவையான அளவு 
  6. மாங்காய் (மிளகாய்,உப்பு சேர்த்தது )     -             தேவையான அளவு 
  7. வடகம் ( கலர் )                                             -           தேவையான அளவு   

செய்முறை:
  • கம்பு குருணையை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  • ஊறிய கம்பை 1:3 என்ற அளவில் தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு சேர்த்து  குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும்.
  • விசில் இறங்கியதும் வேகவைத்துள்ள கம்பை எடுத்து கொள்ளவும்.
  • அதனுடன் மோர் சேர்த்து நீர்க்க கரைத்து,அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, உப்பு சரி பார்த்து பரிமாறவும்.
  • இப்போது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய,சத்தான கம்பங்கூழ்  தயார்.
  • இதனை  மோர் மிளகாய், வடகம், சிறிதாக நறுக்கிய மாங்காயை மிளகாய் தூள் உப்பு சேர்த்து ஊறவைத்து   இதனுடன் பரிமாறினாள் சுவை அதிகம்.  
  • மீதம் உள்ள கம்பங்கூழை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். 
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து உருண்டை மூழ்கும்  மாறு வைக்கவும்.
  • இவ்வாறு வைத்துள்ள உருண்டைகள் 4-5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். (திறந்த வெளியில் வைத்தால் தண்ணீரை தினமும் மாற்றிவிட வேண்டும்)
  • குளிர் சாதன பெட்டியில் வைத்தால் 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.



Tuesday, October 8, 2019

கம்பு இலை அடை



தேவையான பொருள்கள்:


  1. கம்பரிசி                               -           1 கப் 
  2. கடலை பருப்பு                   -           1/2 கப் 
  3. வெல்லம் (கருப்பட்டி )    -           1/2 கப் 
  4. நெய்                                     -           2 டீஸ்பூன் 
  5. முந்திரி                               -           10 
  6. ஏலக்காய் தூள்                  -           1 டீஸ்பூன் 
  7. தேங்காய் துருவல்          -            1/4 கப் 
  8. எண்ணெய்                        -            1 டேபிள் ஸ்பூன் 
  9. உப்பு                                    -           1 சிட்டிகை 
  10. வாழை இலை                  -           5

செய்முறை:

மேல் மாவுக்கு,
  •  கம்பரிசியை கழுவி  3 மணி நேரம் ஊறவைத்து, மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்க்கு நைசாக அரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த மாவு,ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கைவிடாமல் கெட்டியாக கிளறி எடுக்கவும்.
  • மாவு ஆறியதும் கையில் சிறிது எண்ணெய் தடவி கட்டி இல்லாமல் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
  • மேல் மாவு தயார்.
பூரணம்,
  • கடலைப்பருப்பை கழுவி குக்கரில் ஒருபோட்டு 1/2 கப் தண்ணீர் சேர்த்து 1 விசில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
  • விசில் இறங்கியதும் பருப்பை தண்ணீர் வடித்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து, அரைத்த கடலை மாவுடன் சேர்த்து கிளறி கொள்ளவும்.
  • பிறகு அகிலாரிய மாவுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
செய்முறை,
  • வாழை  இலையில் எண்ணெய் தடவி வெறும் தணலில் வாட்டி எடுத்த்து கொள்ளவும்.
  • கம்பு மாவை உருண்டையாக (பூரி உருண்டை) உருட்டி வாட்டி வைத்துள்ள வாழை இலையில் வைத்து தட்டி கொள்ளவும்.
  • தட்டிய மேல் மாவின் நடு பகுதியில் பூரணத்தை சேர்த்து இலையை இரண்டாக மூடி  தட்டி கொள்ளவும்.
  • எவ்வாறு அனைத்து மாவுகளையும் தயார் செய்து கொண்டு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சசேர்த்து கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதித்ததும் இட்லி தட்டில் வாழை இலையில் தட்டி வைத்துள்ள அட்டையை வைத்து மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் வேகவிடவும்.
  • 10 நிமிடம் கழித்து இட்லி பாத்திரத்தை திறந்து இலையில் உள்ள அட்டையை எடுத்து சூடாக பரிமாறவும்.
  • சூடான, சுவையான, சத்து நிறைந்த ,உடலுக்கு குளிர்ச்சி தர கூடிய கம்பு  இலை அடை தயார்.


கம்பு பருப்பு சாதம்

                                                 




தேவையான பொருள்கள்:


  1. கம்பரிசி             -     1 கப்
  2. து.பருப்பு            -      1/4 கப்
  3. பா.பருப்பு           -      1/4 கப் 
  4. தண்ணீர்            -      3 கப் 
  5. மஞ்சள் தூள்     -      1/4 டீஸ்பூன்   
  6. வெங்காயம்       -      1/2 கப்
  7. தக்காளி               -      1/2 கப் 
  8. உப்பு                     -     தேவையான அளவு


தாளிப்பு பொருள்கள் :
  1.   எண்ணெய்               -       2 டீஸ்பூன் 
  2. கடுகு                           -      1 டீஸ்பூன் 
  3. உளுந்தம் பருப்பு      -      1 டீஸ்பூன்
  4. கருவேப்பிலை         -      2 கொத்து 
  5. மல்லி தழை             -      1 கொத்து 
பொடித்து கொள்ள,
       ( மிளகு -  1 டீஸ்பூன் ,சீரகம் -  1டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2,  பூண்டு - 5 )

செய்முறை:
  • கம்பு,பருப்பு இரண்டையும் கழுவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • மிளகு, சீரகம், வரமிளகாய் மூன்றையும் மிக்சியில் அரைத்து பொடி செய்து  கடைசியாக பூண்டையும் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று விட்டு எடுத்து கொள்ளவும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் கடுகு,உளுந்து,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து மசித்து கொள்ளவும்.
  • பிறகு மசாலா பொருட்களை ( மஞ்சள், மிளகாய் தூள்)  சேர்த்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்த பொடியை சேர்த்து வதக்கம்.
  • மசாலா பச்சை வாசம் போனதும் ( கம்பு,பருப்பு சேர்த்து 1:2)என்ற அளவு  தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • தண்ணீர் நன்கு கொதிக்கும் பொது கழுவி ஊற வைத்த கம்பு,பருப்பு இரண்டையும் சேர்த்து ஒரு கொத்தி வந்ததும் உப்பு கரம் பார்த்து மல்லி தழை தூவி குக்கரை மூடி 5 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  • சுவையான,சத்து நிறைந்த,உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய  கம்பு பருப்பு சத்தம் தயார். 
  • இதனை தயிர், தேங்காய் துருவல்,ஊறுகாயுடன் பரிமாறினால் சுவை அதிகமாக இருக்கும். 




Saturday, October 5, 2019

கம்பு சாதம்

                   





தேவையான பொருள்கள்:


  1. கம்பு                               -               1  கப் 
  2. பச்சரிசி குருணை      -               1/2 கப் 
  3. உப்பு                               -               தேவையான பொருள்கள் 
  4. தண்ணீர்                        -               3 கப் 


செய்முறை:

  • கம்பையும், பச்சரிசி குருணையையும் கழுவி 20 நிமிடக்கல் உற வைத்து கொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொத்தி வந்தவுடன் ஊறவைத்த கம்பு,பச்சரிசி குருணையை போட்டு நன்றாக வேகவேக வைக்கவும். 
  • கம்பு நன்கு மலர்ந்து வந்ததும் மீதம் உள்ள தண்ணீரை வடித்து கொள்ளவும்.
  • குக்கரில் கம்பு சாதம் செய்பவர்கள் 1:3 என்ற அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  •  அடுப்பில் 3 விசில் வைத்து,  5 நிமிடங்கள் சிமில் வைத்து இறக்கம்.
  • சுவையான,சத்து நிறைந்த கம்பு சாதம் தயார்.

Thursday, October 3, 2019

வரகரிசி இட்லி

                                               


 

தேவையான பொருள்கள்:


  1. வரகரிசி                       -              1 கப் 
  2. உ.பருப்பு                      -              1/4 கப் 
  3. வெந்தயம்                   -              1 டீஸ்பூன்
  4. உப்பு                              -              தேவையான அளவு  
செய்முறை:
  • ஒரு பாத்திரத்தில் வரகரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி 5 மணி  நேரம்  ஊறவைத்து  கொள்ளவும்.
  • மற்றொரு  பாத்திரத்தில்  உ.பருப்பையும், வெந்தயம்  இரெண்டையும் தண்ணீர் ஊற்றி கழுவி 1 மணி நேரம்  ஊறவைத்து  கொள்ளவும்.   
  • ஊறவைத்த  அரிசியையும், பருப்பையும்  இட்லி  மாவு  பதத்திற்கு  அரைத்து   எடுத்து  கொள்ளவும்.
  • அரைத்த  மாவில்  தேவையான  அளவு  உப்பு  சேர்த்து  கரைத்து,8 மணி  நேரம்  புளிக்க  வைத்து  கொள்ளவும்.
  • 8 மணி  நேரம் களித்து  அடுப்பில் இட்லி  பாத்திரத்தை  வைத்து  தண்ணீர்  ஊற்றி  கொதிக்க  வைக்கவும்.
  • தண்ணீர்  கொதித்தவுடன்  புளித்த  மாவை  எடுத்து  இட்லி  தட்டில்  மாவை  ஊற்றி  இட்லி  பாத்திரத்தில்  வைத்து  5-10  நிமிடங்கள்  வேகவைத்து   கொள்ளவும்.
  • வேகவைத்த இட்லிகளை   சூடாக  பரிமாறவும்.
  • சூடான,சுவையான,சத்துநிறைந்த வரகரிசி  இட்லி தயார்.






   

வரகரிசி பணியாரம்

                                           




தேவையான பொருள்கள்:


  1. வரகரிசி           -      2 கப் 
  2. .பருப்பு          -     3/4 கப் 
  3. எண்ணெய்      -     தேவையான அளவு 
  4. கடுகு                 -    1 டேஸ்பூன் 
  5. தேங்காய்         -    சின்ன துண்டு  
  6. க. பருப்பு          -    1 டீஸ்பூன் 
  7. கறிவேப்பிலை    -     2 கொத்து 
  8. கொத்த மல்லி     -     1 கொத்த மல்லி 
  9. ப. மிளகாய்          -     2


செய்முறை:
  • வரகரிசி, உ.பருப்பையும் 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  • ஊறியதும் கிரைண்டரில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
  • கடாயில் தாளிப்பதர்கு ஏற்ப எண்ணெய் ஊற்றி அதில் கடுகு , க.பருப்பு , ப.மிளகாய் , சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  • பிறகு அரைத்த மாவில் தாளித்தவற்றை கொட்டி தேவையான அளவு உப்பு போட்டு இட்லி மாவு பதத்துக்கு கலந்து கொள்ளவும்.
  • குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து மாவை சட்டியில் ஊற்றி வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
  • சுவையான, சத்து நிறைந்த வரகரிசி பணியாரம் தயார்.