Monday, September 30, 2019

வரகு தக்காளி சாதம்

                                            






தேவையான பொருள்கள்:


  1. வரகரிசி                              -          1 கப் 
  2. வெங்காயம்                       -          2 பெரியது 
  3. தக்காளி                               -           2 
  4. பச்சை மிளகாய்                -           2
  5. கடுகு,உளுந்து                    -            1 டீஸ்பூன் 
  6. கருவேப்பிலை                  -            2 கொத்து 
  7. இஞ்சி, பூண்டு  பேஸ்ட்   -           1 டீஸ்பூன் 
  8. மிளகாய் தூள்                    -            2 டீஸ்பூன் 
  9. மல்லி தூள்                        -             3 டீஸ்பூன் 
  10. மஞ்சள் தூள்                      -            1/4 டீஸ்பூன் 
  11. உப்பு                                     -            தேவையான அளவு 
  12. எண்ணெய்                         -           1 குழி கரண்டி 
  13. நெய்                                    -           4  டீஸ்பூன் 



செய்முறை:

  • ஒரு கப் வரகு அரிசியை 2:2 1/2 அளவில் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு வேகா வைத்து கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும்  கடுகு,உளுந்து, கருவேப்பிலை, பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு இஞ்சி,பூண்டு  பேஸ்ட் போட்டு 2 நிமிடம் வதக்கி பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • மசாலாவை ( மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள்) போட்டு எண்ணெய் நன்கு தனியாக பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • பிறகு 1 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதித்து தொக்கு பதம் வரும் வரை வதக்கி இறக்கவும்.
  • இப்போது தக்காளி தொகை வடித்த வரகு சாதத்தில் கொட்டி சாதம் உடையவள் கிளறி சிறிது மல்லி தழை தூவி பரிமாறவும்.
  • சுவையான, சத்து நிறைந்த வரகு தக்காளி சாதம் தயார். 


Sunday, September 29, 2019

வரகு அரிசி தம் பிரியாணி

                                     

தேவையான பொருள்கள்:
  1. வரகரிசி                                            -           2 கப் 
  2. கேரட்,பட்டாணி,பீன்ஸ்                -          1/2 கப் 
  3. காளிஃபிளவர், உருளை                -          1/2 கப் 
  4. பச்சை மிளகாய்                             -          2 
  5. பெரிய வெங்காயம்                       -          1/2 கப் ( நீளமாக நறுக்கியது)
  6. தக்காளி                                             -         1/4 கப் 
  7. எலுமிச்சை ஜூஸ்                         -         1  டேபுள் ஸ்பூன் 
  8. எண்ணெய்                                       -         1 குழி கரண்டி 
  9. நெய்                                                  -          4 டீஸ்பூன் 
  10. மஞ்சள்                                             -         1/4 டீஸ்பூன் 
  11. மிளகாய் தூள்                                 -         1 டீஸ்பூன்
  12. தயிர்                                                 -         1   டேபுள் ஸ்பூன் 
  13. உப்பு                                                  -          தேவையான அளவு 
  14. தண்ணீர்                                           -          1:2

தாளிப்பு பொருள்கள் :                     
  1. பட்டை                                 -         1
  2. கிராம்பு                                 -         3
  3. பிரிஞ்சி இலை                   -         1
  4. அன்னாசி பூ                        -         1
  5. புதினா                                   -       சிறிதளவு 
  6. கொத்தமல்லி                      -       சிறிதளவு 
  7. இஞ்சி, பூண்டு  பேஸ்ட்     -       2 டேபுள் ஸ்பூன்    

செய்முறை:
  • வரகரிசியைக் கழுவி 1/2 நேரம் ஊறவைக்கவும்.
  • அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயும், நெய்யும் சேர்த்து காயவிடவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் தாளிப்பு பொருள்களை  ( பட்டை, கிராம்பு,பிரிஞ்சி இலை) போடவும்.
  • பிறகு பெரிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதக்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் , புதினா போட்டு  வதக்கவும்.
  • பிறகு தக்காளி போட்டு சிறிது நேரம் வதக்கியுடன், வெட்டி வைத்து  உள்ள காய்கறிகளை போட்டு வதக்கவும்.
  • காய்கள் நன்கு வதங்கியதும் உப்பு,  மசாலா பொருள்களை ( மிளகாய்  தூள்,மஞ்சள் தூள், கரம் மசாலா ) போட்டு வதக்கவும்.
  • தயிர் சேர்த்து  எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • வதக்கிய காய்களில் தண்ணீர் (1:2) சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.
  • தண்ணீர் நன்கு கொதித்ததும் எலுமிச்சை பழச்சாறும், ஊற வைத்த வரகு அரிசியையும் சேர்த்து மூடி போட்டு,அடுப்பை சிமில் வைத்து 15 நிமிடம்  வேகவிடவும்.
  • பிறகு முடியை திறந்து மீதம் உள்ள நெய் சேர்த்து சாதம்  உடையாமல் கிளறி 5 நிமிடம்  வேகவிடவும்.
  • இப்போது சாதம்  3/4 பதம் வெந்து இருக்கும். அடுப்பை அனைத்து விடவும்.                                                                                                                                                                                                                                                           
 தம் போடும்முறை:
  • பாத்திரத்தின்  வாயை ஒரு துணியில் கட்டி  அதன் மேல் ஒரு தட்டு வைத்து எரி தணல் போடலாம்.
  • எரி தணல் கிடைக்காவிட்டால் நன்றாக கொதிக்கும் தண்ணீரை பாத்திரத்துடன் அந்த தட்டின் மேல் வைக்கலாம்.
  • இல்லை என்றால் சூடாக உள்ள குக்கரை கூட வைக்கலாம்.
  • அதிக பட்சம் 10 நிமிடமே  போதும்.
  • இறுதியாக பிரியாணியை சிறிது நெய் விட்டு  கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
  • சுவையான, சத்து நிறைந்த வரகரிசி  பிரியாணி தயார்.










Saturday, September 28, 2019

வரகு அரிசி பொங்கல்

                                             




தேவையான பொருள்கள்:


  1. வரகு அரிசி                                                -                  2 கப் 
  2. பாசி பருப்பு                                                -                1 கப் 
  3. மிளகு                                                          -                2  டீஸ்பூன் 
  4. சீரகம்                                                          -                 2 டீஸ்பூன் 
  5. இஞ்சு                                                          -                 சிறிதளவு 
  6. கருவேப்பிலை                                         -                2 கொத்து 
  7. பெருங்காயம்                                            -                 1 1/2 டீஸ்பூன் 
  8. நெய்                                                            -                 1 டீஸ்பூன் 
  9. முந்திரி                                                      -                  10
  10. எண்ணெய்                                                 -                 1 குழிக்கரண்டி 
  11. உப்பு                                                             -                 தேவையான அளவு 


செய்முறை:

  • வரகரிசி, பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி  1: 4 என்ற அளவில் தண்ணீர் ஊற்றி பெருங்காயத்தூள், உப்பு  சேர்த்து  3 முதல்  4 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
  • பிறகு வாணலியில் எண்ணெய் காய வைத்து, அதில் மிளகு, சீரகம்,முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை  தாளித்து , வரகு பொங்கலில் சேர்க்கவும்.
  • சாதத்தை நன்கு மசித்து சிறிது நெய் ஊற்றி பறி மாறவும்.

Friday, September 27, 2019

மறந்தும், கடந்தும், மறைந்தும் போன உணவுகள்


                       மறந்தும், கடந்தும், மறைந்தும் போன உணவுகள் 

வணக்கம்,
  •  அன்பர்களே இதற்கு முந்தைய நாட்களில் நாம் சிறு தானிய உணவுகளான தினை, சாமை இரண்டின் உணவு முறைகளை பார்த்தோம்.
  • இது போன்ற நமது பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டதால் தான் இன்றும் நம் முன்னோர்கள்! நமது தாத்தா, பாட்டிகள் 90 - 95 வயது வரையிலும், எந்த நோய் நொடியும் இல்லாமல்  ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.
  • அப்பேர் பட்ட உணவுகளை விட்டு விட்டு, நம் இளைய தலைமுறைக்கு நாம் அறிமுக படுத்தும் உணவு என்ன? 
  •  பீஸா, பர்கர் போன்ற உடலுக்கு தீங்கை தரக்கூடிய பண்ணாட்டு உணவு முறைகளை உண்பதற்கு பழக்க படுத்துகிறோம். 
  • இதனால் நம் பிள்ளைகளின் எதிர்கால, ஆரோக்கியமான வாழ்க்கையை நாமே கெடுத்துவிடுகிறோம். 
  • நம் பிள்ளைகளுக்கு  எதிர்காலத்தில், நோய்கள் அற்ற ஆரோக்கியமன  வாழ்கையை அமைத்து தருவது நமது கடமை அல்லவோ!

அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? 
   

  •  நாம் பெரிதாக எதும் செய்ய வேண்டியது இல்லை.
  •  நம் முன்னோர்கள் பயன்படுத்திய, நமது பாரம்பரியமான உணவு முறைகளை நாம் பயன்படுத்தினாலே போதுமானது.
  • இந்த தொகுப்பில் இன்னும் பல சிறுதானிய உணவுகளை பதிவேற்றம் செய்ய உள்ளோம்.
  • இதனை, பார்த்து  சிறு தானிய உணவுகளை சமைத்து கொடுத்து, நமது பாரம்பரிய உணவு முறைகளை நம் எதிர் கால சந்ததியருக்கு பழக்க படுத்துவோம்.
  • தினம் தோறும் சமைக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, வாரத்தில் ஒரு முறை ஒரு சிறுதானிய உணவை சமைத்து கொடுக்கலாம் அல்லவ.
  • சிறுதானியத்தை நம் உணவில் சேர்த்து கொண்டு, ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழலாம் வாருங்கள்.

 
     

Thursday, September 26, 2019

தினை அல்வா

                                                தினை   அல்வா




தேவையான பொருட்கள்:

  1. தினை  அரிசி மாவு                                                  -      200 கிராம்
  2. வெல்லம்                                                                    -     200 கிராம்    
  3. ஏலக்காய் தூள்                                                           -     அரை தேக்கரண்டி 
  4. சுக்கு தூள்                                                                    -     2 சிட்டிகை  
  5. முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு                       -     10 கிராம்  
  6. நெய்                                                                              -     100 கிராம்
 
செய்முறை:

  • தினை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
  •  சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக விட்டு நன்றாக கிளறவும்.
  •  கட்டியாகாமல் பார்த்துக் கொள்ளவும்.
  •  இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.
  • தினை மாவு வெந்து ஆல்வா பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
  • பாதாம், ஏலக்காய் தூள் தூவிவிடவும்.
  • கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சை போட்டு வறுத்து அல்வாவில் கொட்டி கிளறவும்.
  •  சுவையான தினை அல்வா தயார். 

Wednesday, September 25, 2019

தினை அதிரசம்

                                                        தினை அதிரசம் 





தேவையான பொருள்கள்:


  1. தினை அரிசி                                                     -             1 கப்
  2. பனை வெல்லம்                                              -              இனிப்புக்கு ஏற்ப 
  3. ஏலக்காய் தூள்                                                 -              1 சிட்டிகை 
  4. எள்                                                                      -              1 தேக்கரண்டி 
  5. நெய்                                                                    -             1 மே. கரண்டி 
  6. எண்ணெய்                                                         -             தேவையான அளவு 


செய்முறை:

  • தினை  அரிசியை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு ஒரு வெள்ளை துணியில் உலர்த்தி பொடி செய்து கொள்ளவும்.
  • பனை வெல்லத்தை பாகு காய்ச்சவும்.
  • பிறகு தினையரிசி மாவில் கொஞ்சம் எள், ஏலக்காய் தூளை போட்டு, அதில் பனை வெல்லப்பாகை ஊற்றி, இந்த மாவை மிதமாக பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு நாள் விட்டு, மறு நாள் அதில் சிறிது நெய் விட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இலையில் வைத்து தட்டி, சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
  • சுவையான, சத்து நிறைந்த தினை அதிரசம் தயார்.

Tuesday, September 24, 2019

வெந்தய தினைப் பொங்கல்

                                        வெந்தய தினைப் பொங்கல் 





தேவையான பொருள்கள்:


  1. தினை                                   -           1 கப் 
  2. பாசிப்பருப்பு                        -           1 கைப்பிடி 
  3. வெந்தயம்                           -            1 தே.கரண்டி 
  4. நெய்                                     -             2 டீஸ்புன் 
  5. முந்திரி                                -            5 
  6. இஞ்சி                                   -            1 துண்டு
  7. மிளகு, சீரகம்                      -            1 டீஸ்புன் ( ஒன்றிரண்டாக போடித்தது )
  8. உப்பு                                      -             தேவையான அளவு 
  9. தண்ணீர்                               -             தேவையான அளவு 

செய்முறை:

  •  ஒரு கப் தினையுடன், ஒரு கைப்பிடி பாசிப்பருப்பு, ஒரு தே. கரண்டி வெந்தையம் போட்டு 1:2 1/2 என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு குக்கரில் வேக  வைக்கவும்.
  •  வெந்ததும் இறக்கி உப்பு, பெருங்காயம்  சேர்த்து மசித்து கொள்ளவும்.
  • கடாயில் நெய்  விட்டு  முந்திரி, கருவேப்பிலை, இஞ்சி, மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து  தினை சாதத்துடன்  கொட்டி கிளறவும்.
  • சுவையான, சத்து நிறைந்த, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய  தினை வெந்தய பொங்கல் தயார். 

Monday, September 23, 2019

தினை மாவு

                                                            தினை மாவு 






தேவையான பொருள்கள்:


  1. தினை மாவு                              -            2 கப் 
  2. நெய்                                            -           50 கி 
  3. மண்டை வெல்லம்                 -           2 கப் 
  4. ஏலப்பொடி                                -           1 டீஸ்புன் 
  5. முந்திரி                                      -           20 
  6.  பால்                                           -           1/4 கப் 
  7.  உப்பு                                           -           1 சிட்டிகை 



செய்முறை :

  • தினை  அரிசியை வறுத்து, நைஸாக பவுடர் போன்று பொடித்து வைத்து கொள்ளவும்.
  • கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து வைத்து கொள்ளவும்.
  • தினை மாவில் பொரித்த முந்திரி, ஏலப்பொடி, உப்பு, பால் சேர்த்து ரவா லட்டு பதத்தில் உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  • சுவையான, சத்து நிறைந்த தினை லட்டு உருண்டை தயார்.

 குறிப்பு:
  • தினை இனிப்பு நெய் உருண்டையில் அதிக புரத சத்து உள்ளது.
  • பெண்கள் அதிலும் பூப்பெய்திய இளம் பெண்களுக்கு இது நல்லதொரு ஊட்ட சத்து மிக்க தின்பண்டம்.

Sunday, September 22, 2019

சாமை அரிசி காரக்கொழுக்கட்டை

                                      சாமையரிசி  காரக்கொழுக்கட்டை 




தேவையான பொருள்கள்:

  1. சாமை அரிசி                                -              1 கப் 
  2. தேங்காய்  துருவல்                    -              1/4 கப் 
  3. தண்ணீர்                                        -              2 கப் 
  4. கடலெண்ணெய்                         -              1 குளிக்கரண்டி 
  5. கடுகு                                              -             1 டீஸ்புன் 
  6. உ. பருப்பு                                      -             1 டீஸ்புன் 
  7. கருவேப்பிலை                           -             1 கொத்து 
  8. ப. மிளகாய்                                  -             2
  9. உப்பு                                              -           தேவையான அளவு 


செய்முறை:
  • சாமை அரிசியை கொழுக்கட்டை மாவு  பதத்துக்கு அரைத்து சலித்து எடுத்து கொள்ளவும். 
  • அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து, காய்ந்ததும் எண்ணெய்  ஊற்றவும்.
  • பிறகு கடுகு, உளுந்து, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தேங்காய் துருவல் போட்டு நன்கு  வதக்கவும்.
  • அரைத்த சாமை மாவை போட்டு நன்கு கிளறி 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி கொள்ளவும். 
  • தண்ணீர் சுண்டி மாவு வெந்து உருண்டை பிடிக்கும் பதம் பார்த்து இறங்கி கொள்ளவும்.
  • மாவை கொழுக்கட்டை பிடித்து கொள்ளவும்.
  • பிறகு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கோதித்ததும், கொழுக்கட்டையை இட்லி தட்டில் வைத்து 10mins வேக வைக்கவும்.
  • பிறகு கொழுக்கட்டை வெந்ததும் இட்லி பாத்திரத்தில் இருந்து எடுத்து பரிமாறவும்.
  • சுவையான, சத்து நிறைந்த சாமை அரிசி கொழுக்கட்டை தயார். 

Saturday, September 21, 2019

சாமை அரிசி தம் பிரியாணி

                                       சாமை அரிசி தம் பிரியாணி




தேவையான பொருள்கள் :

  1. சமையரிசி                                                         -           2 கப் 
  2. கேரட்                                                                    -           1
  3. பட்டாணி                                                              -           1/4 கப் 
  4. பீன்ஸ்                                                                   -          4
  5. காளிஃபிளவர்                                                       -          சிறிதளவு 
  6. உருளைக்கிழங்கு                                                -          சிறியது 1
  7. பிரிய வெங்காயம் ( நீளமாக நறுக்கிய )        -          2
  8. தக்காளி ( பொடியாக நறுக்கியது )                   -          1
  9. எலுமிச்சை பழ ஜூஸ்                                       -           1 டேபிள் ஸ்பூன்
  10. பச்சை மிளகாய்                                                  -          2 
  11. நெய்                                                                       -          50 கி 
  12. எண்ணெய்                                                            -          1 குளிக்கரண்டி 
  13. மஞ்சள் தூள்                                                         -          1 டீஸ்புன் 
  14. மிளகாய் தூள்                                                      -           1 டீஸ்புன்  
  15. கரம்மசாலா                                                         -          1 டீஸ்புன்  
  16. தயிர்                                                                      -          2 டேபிள்  ஸ்பூன்
  17. தண்ணீர்                                                                -          1:2
  18. உப்பு                                                                       -           தேவையான அளவு


தாளிப்பதற்கு : 
    பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, புதினா 
          (இஞ்சி, பூண்டை அரைத்து கொள்ளவும்.)

செய்முறை :
  • சாமை அரிசியை கழுவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெயும், நெய்யுமாக பாதி ஊற்றி தாளிப்பு பொருள்களை போடவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு  சேர்த்து வதக்கவும்.
  • வதங்கியதும் அரைத்த இஞ்சி பூண்டு சேர்த்து கிளறி, காய்கறிகளை சேர்க்கவும். 
  • 2mins  வதங்கியதும் தக்காளியை சேர்த்து கிளறி மசிந்ததும், தயிர் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு மசாலாவை போட்டு  (கரம், மிளகாய்,மஞ்சள் ) நன்கு எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • வதக்கிய காய்களில் தண்ணீர் (1:2) சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.
  • தண்ணீர் நன்கு கொதித்ததும் எலுமிச்சை பழச்சாறும், ஊற வைத்த சாமை அரிசியையும் சேர்த்து மூடி போட்டு,அடுப்பை சிமில் வைத்து 15 நிமிடம்  வேகவிடவும்.
  • பிறகு முடியை திறந்து மீதம் உள்ள நெய் சேர்த்து சாதம்  உடையாமல் கிளறி 5 நிமிடம்  வேகவிடவும்.
  • இப்போது சாதம்  3/4 பதம் வெந்து இருக்கும். அடுப்பை அனைத்து விடவும்.                                                                                                                                                                                                                                                           
 தம் போடும்முறை:
  • பாத்திரத்தின்  வாயை ஒரு துணியில் கட்டி  அதன் மேல் ஒரு தட்டு வைத்து எரி தணல் போடலாம்.
  • எரி தணல் கிடைக்காவிட்டால் நன்றாக கொதிக்கும் தண்ணீரை பாத்திரத்துடன் அந்த தட்டின் மேல் வைக்கலாம்.
  • இல்லை என்றால் சூடாக உள்ள குக்கரை கூட வைக்கலாம்.
  • அதிக பட்சம் 10 நிமிடமே  போதும்.
  • இறுதியாக பிரியாணியை சிறிது நெய் விட்டு  கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
  • சுவையான, சத்து நிறைந்த சாமை பிரியாணி தயார்.

Friday, September 20, 2019

சாமை அரிசி ரவா பொங்கல்

                                     சாமை அரிசி ரவா பொங்கல் 


                              


தேவையான பொருள்கள்:

  1. சாமையரிசி                                                  -         1கப் 
  2. பாசிப்பருப்பு                                                -          1/2 கப் 
  3. இஞ்சி                                                           -          சிறிதளவு 
  4. மிளகு                                                           -          2 டீஸ்புன் 
  5. சீரகம்                                                           -         2 டீஸ்புன் 
  6. முந்திரி                                                       -         10
  7. உப்பு                                                             -         தேவையான அளவு 
  8. நெய்                                                            -         4 டீஸ்புன் 
  9. தண்ணீர்                                                     -         4 கப் 


செய்முறை:

  • சாமையரிசியை  ரவையாக உடைத்து வைத்து கொள்ளவும்.
  • பாசி பருப்பை குக்கரில் குழைய வேகவைத்து கொள்ளவும்.
  • உடைத்த சாமையரிசியை தண்ணீர்  ஊற்றி,  குக்கரில் 3 விசில் விட்டு   எடுத்து கொள்ளவும்.
  • கடாயில் நெய்  ஊற்றி மிளகு, சீரகம், இஞ்சு, முந்திரி சேர்த்து வருது கொள்ளவும்.
  • சாமை அரிசியை நன்கு மசித்து வேகா வைத்த பாசி பருப்பு, நெயில் வறுத்தவற்றை கொட்டி கிளறவும்.
  • சுவையான, சத்து நிறைந்த சாமை ரவா பொங்கல் தயார்.


Thursday, September 19, 2019

சாமை அரிசி தயிர் சாதம்

                               சாமை அரிசி தயிர் சாதம் 






தேவையான பொருள்கள் :

  1. சாமை                                   -         1 கப் 
  2. தயிர்                                      -         1/4 கப் 
  3. பால்                                       -         2 கப் 
  4. தண்ணீர்                                -        4 கப் 
  5. ப.மிளகாய்                              -       2
  6. இஞ்சி                                      -       சிறு  துண்டு 
  7. திராட்சை                               -      5
  8. மாதுளம் முத்துக்கள்          -      1 கைப்பிடி 
  9. கேரட்                                      -       1 துருவியது 
  10. கடுகு,உளுந்தம் பருப்பு      -       2 டீஸ்புன் 
  11. எண்ணெய்                            -       1 டீஸ்புன்  
  12. கருவேப்பிலை                    -       2 கொத்து 
  13. கொத்த மல்லி தலை         -       1 கொத்து 
  14. உப்பு                                        -      தேவையான அளவு 


செய்முறை :

  • சாமையை சுத்தம் செய்து 1:4 என்ற அளவில் தண்ணீர்  ஊற்றி நன்கு குழைய வேகவைத்து எடுத்து கொள்ளவும். விசில் ஆறியதும் சாதத்தை நன்கு மசித்து கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி  காய்ந்ததும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை,பச்சை மிளகாய், இஞ்சி போட்டு தாளித்து சாமை சாதத்தில் கொட்டவும்.
  • சாமை சாதத்துடன் தயிர், பால், பழவகைகள், துருவிய கேரட், தேவையான அளவு உப்பு  சேர்த்து நன்கு கிளறவும்.
  • பிறகு மல்லி தழை சேர்த்து கிளறி பரிமாறலாம்.
  • சுவையான, சத்து நிறைந்த, உடலுக்கு குளிர்ச்சி  தரக்கூடிய சாமை தயிர் சாதம்  தயார்.

Wednesday, September 18, 2019

சாமையரிசி எலுமிச்சை சாதம்

                                 சாமையரிசி  எலுமிச்சை சாதம்






தேவையான பொருள்கள் :


  1. சாமையரிசி                                   -       2 கப்   
  2. எலுமிச்சை                                    -       2
  3. கடுகு,உளுந்து                               -       1 டீஸ்பூன் 
  4. க.பருப்பு                                          -        1/2  கைப்பிடி 
  5. து.பருப்பு                                         -        1/2  கைப்பிடி 
  6. வறுத்த வேர்க்கடலை                 -        1/2  கைப்பிடி
  7. முந்திரி                                           -         10 
  8. ப.மிளகாய்                                     -         2 (காரத்துக்கு ஏற்ப )
  9. மசால்தூள்                                    -          1டீஸ்புன் 
  10. நல்லெண்ணெய்                          -          1 குளிக்கரண்டி
  11. பெருங்காயம்                               -           1/2 டீஸ்புன்
  12. உப்பு                                                -          தேவையான அளவு
  13. மல்லி தலை                                -        சிறிதளவு            



செய்முறை: 

  • சாமை அரிசியை  கழுவி வேகவைத்து கொள்ளவும்.
  • ஒரு தட்டில் சத்தத்தை கொட்டி ஆறவைக்கவும்.
  • அடுப்பில் கடாயி வைத்து நல்லெண்ணெய்  ஊற்றி,  எண்ணெய் காய்ந்ததும்  கடுகு, உளுந்து, க.பருப்பு, து.பருப்பு, முந்திரி,  வேர் கடலை, ப.மிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயம் போட்டு நன்கு வறுக்கவும்.
  • பிறகு எலுமிச்சை சாறை ஊற்றி,  தேவையான அளவு  உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  • பிறகு ஆறவைத்த சாமை சத்தத்துடன் சேர்த்து கிளறி மல்லி தலை தூவி பரிமாறவும்.
  • சுவையான சாமை எலுமிச்சை சாதம் தயார்.



Tuesday, September 17, 2019

சாமை அரிசி கிச்சடி

                                             சாமை அரிசி  கிச்சடி 






தேவையான பொருள்கள் :


  1. சாமை அரிசி                                  -          2கப்    
  2. தோலுரித்த பூண்டு                       -         1 கைப்பிடி 
  3. வெங்காயம்                                    -        1
  4. ப.மிளகாய்                                      -         2
  5. ப.பட்டாணி                                     -         50 கி 
  6. கேரட்                                                -          1
  7. மஞ்சள் தூள்                                   -          1/2 டிஸ்பூன் 
  8. பிரிஞ்சி  இலை                              -          2
  9. பட்டை,சோம்பு, லவங்கம்           -          தல 2
  10. கடலை எண்ணெய்                       -          1/2 குழிக்கரண்டி 
  11. உப்பு                                                  -          தேவையான அளவு 


செய்முறை :
  • அடுப்பில் கடாய் வைத்து சூடானதும்  எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, லவங்கம், பிரிஞ்சி இலையை போட்டு பொரிய விடவும்.
  • வெங்காயம்  போட்டு பொறித்த பின், தக்காளி  போட்டு வதக்கம்.
  • பிறகு ப.மிளகாய், தட்டிய பூண்டு போட்டு வதக்கம்.
  • வதங்கியதும்  துருவிய  கேரட், ப.பட்டாணியை போட்டு வதக்கம்.
  • அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ( 1:1 1/2 ) 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
  • தண்ணீர் கொதிவந்தவுடன்  கழுவி வைத்துள்ள சாமை அரிசியை போட்டு கிளறி சிறிது நேரம் வேக விடவும்.
  • சாமை அரிசி வெந்து கிச்சடி பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  • சுவையான, சத்து நிறைந்த சாமை அரிசி கிச்சடி தயார்.

Monday, September 16, 2019

சாமை அரிசி சர்க்கரை பொங்கல்

                                       சாமை அரிசி  சர்க்கரை  பொங்கல் 




தேவையான  பொருள்கள் :


  1.  சாமை அரிசி                         -         200 கி 
  2. பாசி பருப்பு                             -        100 கி 
  3. மண்டை வெல்லம்               -        300 கி 
  4. முந்திரி                                    -        10
  5. திரைட்சை                              -         10
  6. ஏலக்காய்த்தூள்                     -         1 டீஸ்புன் 
  7. நெய்                                         -        50 கி 
  8. பச்சை கற்பூரம்                      -        1 சிட்டிகை 
  9. பால்                                          -        200 கி 




செய்முறை :

  • சாமை  அரிசியையும், பாசிப்பருப்பையும்  4 கப் தண்ணீர்,  2 கப் பால் சேர்த்து  குக்கரில் 3 விசில்  கொடுத்து  5நிமிடம் சிம்மில் வைத்து  கொள்ளவும்.
  • வெல்லத்தை பாகு காய்ச்சி குக்கரில்  கொட்டவும்.
  • நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து கொள்ளவும்
  • பிறகு  ஏலக்காய்ப்பொடி, பச்சை கற்பூரம் சேர்த்து நன்கு கிளறவும்.
  • சுவை மிகுந்த சத்து நிறைந்த சாமை சர்க்கரை பொங்கல் தயார்.     

Sunday, September 15, 2019

சாமை கல்கண்டு பால் பாயாசம்

                                              சாமை கல்கண்டு பால்  பாயாசம் 








தேவையான பொருள்கள் :

  1. சாமை அரிசி         -    1 கப் 
  2. பயத்தம் பருப்பு     -   1/2 கப் 
  3. நெய்                         -   2 டீஸ்புன் 
  4. கல்கண்டு                -   3/4 கப் 
  5. திராட்சை                 -   10
  6. முந்திரி                     -    10
  7. பால்                           -    2 கப் 
  8. தண்ணீர்                    -     2 கப் 


செய்முறை :
  •  பயத்தம் பருப்பை  வெறும்  வாணலியில்  சிவக்க  வறுக்கவும். 
  •  சாமை  அரிசியையும்,  பருப்பையும்  கழுவி  குக்கரில்  6  விசில்                வேகவிடவும்.( பாலும், தண்ணீரும் சம அளவு    சேர்த்து கொள்ளலாம்.)
  •  கல்கண்டை  மிக்சியில்  பொடித்து   வைக்கவும்.
  •  கடாயில்  நெய்  காய  வைத்து   திராட்சை, முந்திரியை  வறுத்து எடுத்து    வைக்கவும்.
  •  சாமை சாதத்துடன் கல்கண்டு பொடியைப்  போட்டு  நன்கு  கிளறவும்.
  •  முந்திரி, திராட்சை  சேர்க்கவும்.
  •   தேவைப்பட்டால்  இன்னும்  சிறிது  நெய்  சேர்க்கவும். 
  • சுவையான  சத்து  நிறைந்த  சாமை கல்கண்டு  பாயாசம்  தயார்.

Saturday, September 14, 2019

தினை பாயாசம்

                                                     தினை பாயாசம் 



    
                     




   
       தேவையான பொருள்கள் :

    1. தினை மாவு                -   1/2 கப் 
    2. பால்                              -   4கப் 
    3. நெய்                              -   6 டீஸ்புன் 
    4. முந்திரி                         -   10
    5. திராட்சை                     -   10
    6. ஏலக்காய் தூள்           -   1 டீஸ்புன்
    7. சக்கரை                        -   1 1/2 கப்
    8. தேங்காய் துருவல்    -  1 கப் 




செய்முறை  :
  • தினை  மாவை தண்ணீர் ஊற்றி  நன்றாகக்  கரைத்து ,  stove வை  medium speedல் வைத்து  அடி பிடிக்காமல் கிளற வேண்டும்.   
  •  தினை மாவு வெந்ததும் சர்க்கரையை அதில் கொட்டி நன்றாக கிளறி  பாயசம் பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
  •  பிறகு  நெயில் முந்திரி, திராட்சையை வறுத்து பாயாசத்தில் கொட்டி, தேங்காய் துருவல் ,ஏலக்காய் பொடியையும் பாயாசத்தில் சேர்த்து கிளறி இறக்கவும்.
  •  சத்து நிறைந்த  சுவையான தினை பாயாசம் தயார் .



Thursday, September 12, 2019

கீரைகளின் மருத்துவ பயன்கள்

                                       கீரைகளின் மருத்துவ பயன்கள்

1.காசினி கீரை :
          சிறுநீரகத்தை நன்கு செயல்படவைக்கும். உடல் வெப்பத்தை தனிக்கும்.

2.பசலை கீரை :
          தசைகளை பலம் அடைய செய்யும்.

3.அரைக்கீரை :
          ஆண்மை குறையை நிவர்த்தி செய்யும்.

4.குப்பைக்கீரை :
           புசியை தூண்ட கூடிய தன்மை கொண்டது. உடலில் எங்கேனும் வீக்கம் இருந்தால் அந்த வீக்கத்தை கரைக்க கூடிய தன்மை கொண்டது.

5.அகத்திக்கீரை :
           இரத்தத்தை சுத்தம் செய்து பித்தத்தை சரிசெய்யும் ஆற்றல் உடையது.

6.பொன்னாங்கண்ணி கீரை :
                 பொழிவான உடல் அழகை தரும். கண்களுக்கு  பார்க்கும் திறனை அதிகரிக்கும்.

7.முருங்கைக்கீரை :
            நீரழிவு நோய் குணமாகும், கண்களுக்கு குளிர்ச்சி, உடல் பலம் அதிகமாகும், இரும்பு சத்து அதிகம் உள்ளது.


8.வல்லாரை: 
        நினைவாற்றல் அதிகம் தரும், மூளைக்கு நல்ல உணவு வல்லாரை.

9.முடக்கத்தான் கீரை :
               கை, கால் முடக்கம் நிவர்த்தி ஆகும். வாயு நீங்கும்.

10.புதினா :
       இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

11.முள்ளங்கி கீரை :
             நீரடைப்பை நீககும்.

12.பருப்பு கீரை :
          பித்தம் நீங்கும்.

13.புளிச்சைக்கீரை :
            கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை குணமாக்கும், ஆண்மை பலம் தரும்.

14.மணத்தக்காளி கீரை :
                வாய் புண், வயிற்று புண் குணமாகும், தேமல் நீங்கும்.

15.முளைக்கீரை :
           பசியை தூண்டும். நரம்பு பலம் அடையும்.

16.வெந்தயக்  கீரை :
            மலச்சிக்கலை நீக்கும். கல்லீரல் பலமாக்கும். வாத நோய், காச நோய் குணமாகும்.

17.தூதுவளை:
         சளித்தொல்லை நீங்கும். சரும நோய் குணமாகும். ஆண்மை குறைவு சரியாகும்.

18.ஓமவல்லி :
        இருமல், சளிக்கு சிறந்த மருந்து.

19.ஆவாரை :
        சர்க்கரைக்கு மிக சிறந்த மருந்து.

20.கீழாநெல்லி :
         மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து.

21.துளசி :
     சளி, காது வலி, இதய நோய் குணமாகும்.


22.நொச்சி :
      ஆஸ்த்துமா, தலை வலி, காது வலி. மூச்சி திணறல் நீங்கும்.



Wednesday, September 11, 2019

சிறுதானியத்தின் பயன்கள்

நமது பாரம்பரிய உணவு முறையில் சிறுதானியத்தின் பயன்கள்  :

1.தினை :

  •  உடலில் கப ஆதிக்கம் அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படுகிறது.


  • தினையை நம் உணவில் சேர்த்து கொள்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.


2.கம்பு :

  •    மற்ற தானியங்களை விட கம்பு அதிக புரத சத்துமட்டுமல்லாது அமினோ அமிலத்தையும் அதிகம் பெற்றுள்ளது.
  •  போதிய அளவு மாவுச்சத்தும் அதிக ருசியையும்  கொடுக்கக்கூடியது.
  •  கொழுப்பும், வைட்டமின்களும், தாது உப்புக்களும் இத்தானியத்தில் நிறைந்துள்ளன. 
  • மேலும் இரத்த அபிவிருத்திக்கான இரும்பு சத்து மற்ற தானியங்களை  விட இதில் அதிக அளவு உள்ளது.

3.சாமை :

  •     உடல் அசதி மற்றும் தளர்ச்சியை போக்கி சுறுசுறுப்பு தரும்.
  •  எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். 
  • இதை தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படம்.
  • குறிப்பாக முதுகுவலி குறையும்.

4.வரகு :

  •     வரகில் அதிக அளவு லெசித்தின், நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது.
  •  மேலும் இதில் பி – வைட்டமின்கள் குறிப்பிடும் படியாக நியாசின மற்றும் ஃபோலிக் ஆசிட், தாது உப்புக்கள் கால்சியம், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.
  •  வரகு உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்லதொரு உணவாகும். 
  • சீரான எடைக் குறைப்பதற்கும் உதவும். 
  • உடல் பருமனால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு நல்லதொரு தீர்வாகும்.

5.கேழ்வரகு :

  •       கேழ்வரகில் உள்ள மாவுச்சத்து மெதுவாக சர்க்கரையாக மாறும் தன்மை உள்ளதால், கேழ்வரகினை உண்பதால் நீரழிவு நோய் வராமல் இருக்கவும்.
  •  நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
  • மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் ஜீரண சக்தியை அதிகமாக்கவும், இரத்ததில் உள்ள தேவையில்லாத சர்க்கரை மற்றும் கொழப்பு பொருட்களின் செரிமானத்திற்கு உதவுகிறது        


6.குதிரை வாலி :

  •  நார் சத்து மிகுதியாக காணப்படுவதால் நமது உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும், செரித்தலின் போது இரத்தத்திலிருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது.
  •  ஆகவே இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாக பயன்படுகிறது.

7.சோளம் :

  • தானியம் உணவாகவும், உலர்ந்த சோளத்தட்டை கால்நடை தீவனமாகவும் பயன்படுகிறது.
  •  சோளத்தில் உடலுக்கு தேவையான ஆற்றல், புரதம், உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுஉப்புகள் அதிகளவில் இருக்கின்றன.
  •  மேலும் சோளம் இதய நோய்கள், இரத்தக் கொதிப்பு மற்றும் நீரழிவு நோயை குறைக்கும்.