தினை அதிரசம்
தேவையான பொருள்கள்:
தேவையான பொருள்கள்:
- தினை அரிசி - 1 கப்
- பனை வெல்லம் - இனிப்புக்கு ஏற்ப
- ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
- எள் - 1 தேக்கரண்டி
- நெய் - 1 மே. கரண்டி
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- தினை அரிசியை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு ஒரு வெள்ளை துணியில் உலர்த்தி பொடி செய்து கொள்ளவும்.
- பனை வெல்லத்தை பாகு காய்ச்சவும்.
- பிறகு தினையரிசி மாவில் கொஞ்சம் எள், ஏலக்காய் தூளை போட்டு, அதில் பனை வெல்லப்பாகை ஊற்றி, இந்த மாவை மிதமாக பிசைந்து கொள்ளவும்.
- ஒரு நாள் விட்டு, மறு நாள் அதில் சிறிது நெய் விட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இலையில் வைத்து தட்டி, சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
- சுவையான, சத்து நிறைந்த தினை அதிரசம் தயார்.