Sunday, April 26, 2020

சோள ரொட்டி

சோள  ரொட்டி 






தேவையான  பொருள்கள் :

  1. சோள  மாவு              -                  1 கப் 
  2. சர்க்கரை                     -                  1 சிட்டிகை 
  3. உப்பு                              -                   தேவையான அளவு 
  4. எண்ணெய்                 -                 1 டீஸ்பூன் 
  5. நெய்                              -                 சிறிதளவு 

செய்முறை :

  • சோள மாவை உப்பு , சர்க்கரை , எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவை 10 நிமிடங்கள் ஒரு டவல் போட்டு மூடி வைக்கவும்.
  • பிறகு மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  • சப்பாத்தி கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்தி தேய்ப்பது போல தேய்த்து கொள்ளவும்.
  • அடுப்பில் தோசை தவாவை வைத்து தவா சூடானதும்,தேய்த்து வைத்துள்ள சோள ரொட்டியை போட்டு சிறிது நெய் விட்டு,திருப்பி போட்டு இருபுறமும் நன்கு வேக வைத்து எடுத்துகொள்ளவும்.
  • சூடான சுவை மிகுந்த சோள ரொட்டி தயார்.




சோள மசாலா பொரி

சோள மசாலா பொரி 



தேவையான பொருள்கள்:

  1. சோளம்                                                                                    -      1 கப் 
  2. உப்பு                                                                                           -      தேவையான அளவு 
  3. மிளகாய் தூள்                                                                        -      கால் ஸ்பூன் 
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம்                                -      1
  5. தக்காளி, துருவிய கேரட் , கொத்தமல்லி  தழை   -       கால் கப்
  6. எலுமிச்சை ஜூஸ்                                                              -       1 டீஸ்பூன் 
  7. மிளகு தூள்                                                                             -       கால்  ஸ்பூன்                  



  செய்முறை :   
  • சோளத்தை கல் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும்.
  • அடுப்பில் இரும்பு கடாய் வைத்து மிதமான தீயில் சோளத்தை கொட்டி பொரிக்கவும்.
  • பொறித்து வைத்துள்ள சோளத்தில் மிளகு தூள் , உப்பு , மிளகாய் தூள் , நறுக்கிய வெங்காயம் , துருவிய கேரட் , மல்லி தழை , எலுமிச்சை ஜூஸ்  அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • இப்பொது சுவை மிகுந்த மசாலா சோள பொறி தயார்.