சாமை அரிசி ரவா பொங்கல்
தேவையான பொருள்கள்:
- சாமையரிசி - 1கப்
- பாசிப்பருப்பு - 1/2 கப்
- இஞ்சி - சிறிதளவு
- மிளகு - 2 டீஸ்புன்
- சீரகம் - 2 டீஸ்புன்
- முந்திரி - 10
- உப்பு - தேவையான அளவு
- நெய் - 4 டீஸ்புன்
- தண்ணீர் - 4 கப்
செய்முறை:
- சாமையரிசியை ரவையாக உடைத்து வைத்து கொள்ளவும்.
- பாசி பருப்பை குக்கரில் குழைய வேகவைத்து கொள்ளவும்.
- உடைத்த சாமையரிசியை தண்ணீர் ஊற்றி, குக்கரில் 3 விசில் விட்டு எடுத்து கொள்ளவும்.
- கடாயில் நெய் ஊற்றி மிளகு, சீரகம், இஞ்சு, முந்திரி சேர்த்து வருது கொள்ளவும்.
- சாமை அரிசியை நன்கு மசித்து வேகா வைத்த பாசி பருப்பு, நெயில் வறுத்தவற்றை கொட்டி கிளறவும்.
- சுவையான, சத்து நிறைந்த சாமை ரவா பொங்கல் தயார்.