சாமை அரிசி தயிர் சாதம்
தேவையான பொருள்கள் :
தேவையான பொருள்கள் :
- சாமை - 1 கப்
- தயிர் - 1/4 கப்
- பால் - 2 கப்
- தண்ணீர் - 4 கப்
- ப.மிளகாய் - 2
- இஞ்சி - சிறு துண்டு
- திராட்சை - 5
- மாதுளம் முத்துக்கள் - 1 கைப்பிடி
- கேரட் - 1 துருவியது
- கடுகு,உளுந்தம் பருப்பு - 2 டீஸ்புன்
- எண்ணெய் - 1 டீஸ்புன்
- கருவேப்பிலை - 2 கொத்து
- கொத்த மல்லி தலை - 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- சாமையை சுத்தம் செய்து 1:4 என்ற அளவில் தண்ணீர் ஊற்றி நன்கு குழைய வேகவைத்து எடுத்து கொள்ளவும். விசில் ஆறியதும் சாதத்தை நன்கு மசித்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை,பச்சை மிளகாய், இஞ்சி போட்டு தாளித்து சாமை சாதத்தில் கொட்டவும்.
- சாமை சாதத்துடன் தயிர், பால், பழவகைகள், துருவிய கேரட், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- பிறகு மல்லி தழை சேர்த்து கிளறி பரிமாறலாம்.
- சுவையான, சத்து நிறைந்த, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய சாமை தயிர் சாதம் தயார்.