Friday, April 24, 2020

மில்லட் பணியாரம்

மில்லட் பணியாரம் 


தேவையான பொருட்கள் :
    1. அரிசி , கம்பு , சோளம் , தினை , வரகு     -   தலா  250 கிராம்
    2.  உளுந்து                                                              -   1 கைப்பிடி 
    3. வெந்தயம்                                                          -   1 ஸ்பூன் 
    4. கருப்பட்டி                                                           -   1 உருண்டை 
    5.  வெல்லம்                                                           -   1 உருண்டை 
    6.  ஏலக்காய்                                                           -     3 
    7.  வெங்காயம் பெரியது                                   -     1
    8. பச்சை மிளகாய்                                               -      2
    9. இஞ்சி                                                                   -   1 துண்டு 
    10. பூண்டு                                                                  -   3 பல் 
    11.  உப்பு                                                                     -   தேவையான அளவு  

செய்முறை :

  • அனைத்து தானியங்களையும் நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  • பிறகு ஊறிய மாவை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். ரைஸ் மில்லில் கொடுத்தும் அரைத்து கொள்ளலாம். 
  • அரைத்த மாவில் தேவையான அளவு எடுத்து அதனுடன் கருப்பட்டி, வெல்லம் இரண்டையும் அடுப்பில் காய்ச்சி ஒரு கொத்தி வந்ததும் இறக்கி வடித்து மாவுடன் கொட்டி, ஏலக்காய் பொடி, 1 பிஞ்சி உப்பு  தூவி பணியார மாவு போன்று கரைத்து கொள்ளவும்.
  • இதனை பணியார கல்லில் எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றி இருபுறமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.
  • சுவையான மில்லட் இனிப்பு பணியாரம் தயார்.
  • கார பணியாரம் செய்வதற்க்கு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , உளுந்து ,கருவேப்பிலை , நறுக்கிய வெங்காயம் ,உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  • வதக்கிய வெங்காயத்தை தேவையான அளவு மாவுடன் சேர்த்து தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
  • பின்பு பணியார கல்லில் எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றி இருபுறமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.
  • சுவை மிகுந்த , சத்தான மில்லட்  பணியாரம் தயார்.