Saturday, April 25, 2020

வரகரிசி பணியாரம்

வரகரிசி  பணியாரம் 




தேவையான பொருள்கள் :

  1. வரகரிசி                                                                 -   1ஆழாக்கு  ( 200 கிராம்)
  2. உளுந்தம் பருப்பு                                                -    3/4 ஆழாக்கு  ( 75 கிராம் )
  3. எண்ணெய்                                                            -   தேவையான அளவு 
  4. வெந்தயம்                                                             -    1 டீஸ்பூன் 
  5. கடுகு                                                                       -    1 டீஸ்பூன் 
  6. தேங்காய்                                                              -    ஒரு துண்டு 
  7. கறிவேப்பிலை                                                   -    1 கொத்து 
  8. கொத்த மல்லி , உப்பு , பச்சை மிளகாய்   -    தேவையான அளவு 
  9. கருப்பட்டி (அ ) வெல்லம்                               -   தேவையான அளவு 
  10. ஏலக்காய்                                                               -    4

செய்முறை :

  • வரகரிசி , உளுந்து , வெந்தயம் மூன்றையும் இட்லி மாவுக்கு அரைப்பது போல கழுவி ஊறவைத்து  கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
  • அரைத்த மாவை உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
  • பிறகு புளித்த மாவில் தேவையான அளவு எடுத்து வெல்லம் அல்லது கருப்பட்டியை தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடித்து மாவுடன் கலந்து கொள்ளவும்.
  • பிறகு மாவுடன் இடித்த ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • இப்போது அடுப்பில் பணியார கல்லை வைத்து கல் சூடானதும் குழிகளில் எண்ணெய் விட்டு மாவை விட்டு நன்கு சிவந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் சிவக்க வேகா னைத்து எடுக்கவும்.
  • சுவையான இனிப்பு வரகரிசி பணியாரம் தயார்.

கார பணியாரம்:
  • ஒரு கடாயில்  தாளிப்புக்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு , உளுந்தம் பருப்பு , கறிவேப்பிலை ,பச்சை மிளகாய் , இஞ்சி , வெங்காயம் , தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  • இப்போது தேவையான அளவு மாவு எடுத்து அதனுடன் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  • பணியார கல்லில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் சிக்க வேக வைத்து எடுக்கவும்.
  • சூடான , சுவையான வரகரிசி பணியாரம் தயார் .
முக்கிய குறிப்பு :

  •  மாவை ஆட்டி கரைக்கும் போது பாதி அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  • ஏனென்றால் இனிப்பு பணியாரம் செய்யும் பொது உப்பு குறைவாக இருக்க வேண்டும்.
  • கார பணியாரத்துக்கு  வெங்காயம் வதக்கும் போது தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கொள்ளவும்.