Thursday, April 23, 2020

சோள பணியாரம்

சோள பணியாரம்





 தேவையான பொருட்கள் : 
                                           
1.வெள்ளை சோளம்                                       -  1 கப்
2. இட்லி அரிசி (அ) புழுங்கல் அரிசி        - 1\2 கப்

3. பச்சரிசி                                                            -   1\2 கப்

4. உளுந்து                                                           -   1\2 கப்

5. வெந்தயம்                                                      -     1 ஸ்பூன்


செய்முறைகள் :
        * வெள்ளை சோளம் , இட்லி அரிசி இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
     
        * வெந்தயம் , உளுந்து இரண்டையும் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ளலாம்.

         * இப்போது இட்லி மாவு அரைப்பது போல அரைத்துஅரைத்து உப்பு சேர்த்து கரைத்து 6 முதல் 8 மணி நேரம் புளிக்க விடவும்.

         * முதல் நாள் இரவு மாவு அரைத்து மறுநாள் காலை பணியாரம் செய்யலாம்.

         * இனிப்பு பணியாரம் விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய் பூ,ஏலக்காய்  சேர்த்து கலந்து பணியாரம் சுடலாம்.

          *கார பணியாரம் விரும்புபவர்கள் கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் சிறிது கடுகு , உளுந்தம் பருப்பு , கடலை பருப்பு , பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை , இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி மாவுடன் சேர்த்து கலந்து பணியாரம் சுடலாம்.

          * கல்லில் எண்ணெய்  ஊற்றி மாவை  விட்டு இருபுறமும் திருப்பி போட்டு நன்கு சிவக்க விட்டு எடுக்கவும்.

          * இப்போது சூடான கமகமக்கும் சோள இனிப்பு மற்றும் கார பணியாரம் தயார்.

          * இதனுடன் தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.






தேவையான 
ஜிஹ்
பிபி