சாமையரிசி காரக்கொழுக்கட்டை
தேவையான பொருள்கள்:
- சாமை அரிசி - 1 கப்
- தேங்காய் துருவல் - 1/4 கப்
- தண்ணீர் - 2 கப்
- கடலெண்ணெய் - 1 குளிக்கரண்டி
- கடுகு - 1 டீஸ்புன்
- உ. பருப்பு - 1 டீஸ்புன்
- கருவேப்பிலை - 1 கொத்து
- ப. மிளகாய் - 2
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- சாமை அரிசியை கொழுக்கட்டை மாவு பதத்துக்கு அரைத்து சலித்து எடுத்து கொள்ளவும்.
- அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து, காய்ந்ததும் எண்ணெய் ஊற்றவும்.
- பிறகு கடுகு, உளுந்து, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தேங்காய் துருவல் போட்டு நன்கு வதக்கவும்.
- அரைத்த சாமை மாவை போட்டு நன்கு கிளறி 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி கொள்ளவும்.
- தண்ணீர் சுண்டி மாவு வெந்து உருண்டை பிடிக்கும் பதம் பார்த்து இறங்கி கொள்ளவும்.
- மாவை கொழுக்கட்டை பிடித்து கொள்ளவும்.
- பிறகு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கோதித்ததும், கொழுக்கட்டையை இட்லி தட்டில் வைத்து 10mins வேக வைக்கவும்.
- பிறகு கொழுக்கட்டை வெந்ததும் இட்லி பாத்திரத்தில் இருந்து எடுத்து பரிமாறவும்.
- சுவையான, சத்து நிறைந்த சாமை அரிசி கொழுக்கட்டை தயார்.