Sunday, September 29, 2019

வரகு அரிசி தம் பிரியாணி

                                     

தேவையான பொருள்கள்:
  1. வரகரிசி                                            -           2 கப் 
  2. கேரட்,பட்டாணி,பீன்ஸ்                -          1/2 கப் 
  3. காளிஃபிளவர், உருளை                -          1/2 கப் 
  4. பச்சை மிளகாய்                             -          2 
  5. பெரிய வெங்காயம்                       -          1/2 கப் ( நீளமாக நறுக்கியது)
  6. தக்காளி                                             -         1/4 கப் 
  7. எலுமிச்சை ஜூஸ்                         -         1  டேபுள் ஸ்பூன் 
  8. எண்ணெய்                                       -         1 குழி கரண்டி 
  9. நெய்                                                  -          4 டீஸ்பூன் 
  10. மஞ்சள்                                             -         1/4 டீஸ்பூன் 
  11. மிளகாய் தூள்                                 -         1 டீஸ்பூன்
  12. தயிர்                                                 -         1   டேபுள் ஸ்பூன் 
  13. உப்பு                                                  -          தேவையான அளவு 
  14. தண்ணீர்                                           -          1:2

தாளிப்பு பொருள்கள் :                     
  1. பட்டை                                 -         1
  2. கிராம்பு                                 -         3
  3. பிரிஞ்சி இலை                   -         1
  4. அன்னாசி பூ                        -         1
  5. புதினா                                   -       சிறிதளவு 
  6. கொத்தமல்லி                      -       சிறிதளவு 
  7. இஞ்சி, பூண்டு  பேஸ்ட்     -       2 டேபுள் ஸ்பூன்    

செய்முறை:
  • வரகரிசியைக் கழுவி 1/2 நேரம் ஊறவைக்கவும்.
  • அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயும், நெய்யும் சேர்த்து காயவிடவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் தாளிப்பு பொருள்களை  ( பட்டை, கிராம்பு,பிரிஞ்சி இலை) போடவும்.
  • பிறகு பெரிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதக்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் , புதினா போட்டு  வதக்கவும்.
  • பிறகு தக்காளி போட்டு சிறிது நேரம் வதக்கியுடன், வெட்டி வைத்து  உள்ள காய்கறிகளை போட்டு வதக்கவும்.
  • காய்கள் நன்கு வதங்கியதும் உப்பு,  மசாலா பொருள்களை ( மிளகாய்  தூள்,மஞ்சள் தூள், கரம் மசாலா ) போட்டு வதக்கவும்.
  • தயிர் சேர்த்து  எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • வதக்கிய காய்களில் தண்ணீர் (1:2) சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.
  • தண்ணீர் நன்கு கொதித்ததும் எலுமிச்சை பழச்சாறும், ஊற வைத்த வரகு அரிசியையும் சேர்த்து மூடி போட்டு,அடுப்பை சிமில் வைத்து 15 நிமிடம்  வேகவிடவும்.
  • பிறகு முடியை திறந்து மீதம் உள்ள நெய் சேர்த்து சாதம்  உடையாமல் கிளறி 5 நிமிடம்  வேகவிடவும்.
  • இப்போது சாதம்  3/4 பதம் வெந்து இருக்கும். அடுப்பை அனைத்து விடவும்.                                                                                                                                                                                                                                                           
 தம் போடும்முறை:
  • பாத்திரத்தின்  வாயை ஒரு துணியில் கட்டி  அதன் மேல் ஒரு தட்டு வைத்து எரி தணல் போடலாம்.
  • எரி தணல் கிடைக்காவிட்டால் நன்றாக கொதிக்கும் தண்ணீரை பாத்திரத்துடன் அந்த தட்டின் மேல் வைக்கலாம்.
  • இல்லை என்றால் சூடாக உள்ள குக்கரை கூட வைக்கலாம்.
  • அதிக பட்சம் 10 நிமிடமே  போதும்.
  • இறுதியாக பிரியாணியை சிறிது நெய் விட்டு  கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
  • சுவையான, சத்து நிறைந்த வரகரிசி  பிரியாணி தயார்.