முடக்கத்தான் கீரை தோசை
தேவையான பொருள்கள் :
- முடக்கத்தான் கீரை - 2 கப்
- புழுங்கல் அரிசி - 1 கப்
- உளுந்து - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
- துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ளவும்.
- அரிசி , உளுந்து , துவரம் பருப்பு , வெந்தயம் அனைத்தையும் கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும் .
- 1 மணி நேரம் கழித்து அணைத்தையும் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
- மாவு பாதி அளவுக்கு அரை பட்ட பிறகு கழுவி நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- பிறகு கரைத்த மாவை 7 முதல் 8 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.
- புளித்த மாவை எடுத்து தோசை கல்லில் 1 கரண்டி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
- சூடான , சுவையான ,உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய முடக்கத்தான் தோசை தயார்.