Thursday, December 28, 2017

நம் தமிழ் பெண்கள் மூக்குத்தி அணிவதன் அவசியம்


பெண்கள் மூக்குத்தி அணிவதன் அவசியம் 





  • பெண்ணின் மூக்கு காதுகளில் துலை இடுவதால் ஆரோக்கியமாக இருக்கலாம் என ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றது.

  • அப்படி துலை இட்ட இடத்தில் தங்கம் மற்றும் நவரத்தினங்களை அணிவதால் மாதம் தோறும் மற்றும் மகபேறு காலங்களிளும் ஏற்பட கூடிய இழந்த சக்தியை ஈடு செய்யும் என வைத்திய நூல்கள் கூறுகிறது.

  • தியானத்திற்க்கும் மற்றும் மண தடுமாற்றம் இல்லாமல் இருக்கவும் மூக்குத்தி உதவுகிறது என ஞானிகளும் ரிசிகளும் கூறுகின்றனர்.

  • பெண்கள் மூக்குத்தி அணிவதால் முகத்தில் லெட்சுமி கடாசம் இருக்கும் என நம் மூதாதையர்கள் கூறினார்கள்.


இதற்கான உண்மை காரணம் பின்வருவன:

  •  பார் கடலை கடைந்த பொழுது அதில் கிடைத்த பொருட்களுடன் மூதேவியும்அதன் பின் லெட்சுமி தேவியும் வந்ததாக கூறுவார்கள். முதலில் மூதேவி வந்ததால் அவளை அக்கா என்றும் இரண்டாவதாக லெட்சுமி தேவி வந்ததால் லெட்சுமியை தங்கை என்றும் கூறுவார்கள்.
  • லெட்சுமி சென்ற இடம் சீறும் சிறப்புமாகவும் மூதேவி சென்ற இடம் சீர் குலைந்தும் இருந்தது. இதனை அறிந்த மூதேவி சிவ பெருமானிடம் சென்று என்னை யாரும் விரும்புவது இல்லை எனவும் தன்னை மதிக்கக்கூடிய இடத்தில் நான் இருக்க விரும்புகிறேன் என கேட்டாறாம். கேட்டதை கொடுக்கும் மணம் கொண்ட சிவபெருமான் மூதேவியிடம் நீ எங்கு இருக்க விரும்புகிறாய் என கேட்டார்.
  • மூதேவி எல்லோராலும் மதிக்கப்பட கூடிய பசுவின் முகத்திலும்பெண்ணின் மூக்கிலும்  ஆணின் இடுப்பிலும் இருக்க விரும்புவதாக கூறினால். அவள் கேட்டு கொண்ட படியே வரமும் தரப்பட்டது.
  • இதனை அறிந்த அந்த மூவரும் சிவ பெருமானிடம் சென்று எல்லோராலும் போற்றப்படும் எங்களிடம் மூதேவி இருந்தால் எங்களை எப்படி எல்லோரும் விரும்புவார்கள் என கேட்டனர்.
  • அதற்கு சிவபெருமான் உங்களிடம் மூதேவி வராமல் இருக்க நான் ஒரு வழி சொல்கிறேன் என்று கூறினார்.
  • ஆண்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து செய்ய கூடிய எந்த செயலிலும் மூதேவி வரமாட்டால் எனவும். 
  • சிம்மாசனத்தில் அமராமல் செய்யும் செயலில் மூதேவி வாசம் கொள்வாள் என்றும் கூறினாறாம்.
  • பசுவிற்க்கு முகத்தில் மூதேவி இருப்பதால் பசுவின் பின் புறம் லெட்சுமி குடி கொண்டு இருப்பாள். 
  • பசுவின் கோமியத்தை கொண்டு பூஜை செய்ய வீட்டில் லெட்சுமி குடி கொள்வாள் எனவும.
  •  மேலும் எந்த விழங்குக்கும் இல்லாத அற்புதம் அதாவது உனது உடல் முழுவதும் அனைத்து கடவுள்களும் உறைய கூடிய இடமாகவும்.
  •  உன் இடத்தில் வர கூடிய பால், தயிர், நெய் என அனைத்தும் இறைவழிபாட்டுக்கும். மனிதனின் உடல் ஆரோக்கித்துக்கம் பயன்படகூடியதாக இருக்கும் எனவும் கூறினாறாம்.
  • பெண்களுக்கு மூக்கில் மூதேவி இல்லாமல் இருக்க லெட்சுமி தேவியின் அம்சமான நவரத்தினம் அல்லது தங்கத்தால் ஆன மூக்குத்தியை அணிவதால் மூதேவி வரமாட்டால் என்றும் கூறினார்.
  •  இவ்வாறு மூக்குத்தி அணிவதால் லெட்சுமி தேவி நித்தியவாசம் செய்வதோடு சுமங்கலி பூஜையும் செய்வார்கள் என கூறி வரம் அளித்ததாக ஆன்மீக தகவல் கூறுகிறதாம்.
  • ஆகையால் பெண்கள் மூக்குத்தி அணிவது அவசியமானதாகும். 


No comments:

Post a Comment