Wednesday, May 13, 2020

முடக்கத்தான் கீரை தோசை 







தேவையான பொருள்கள் :
  1. முடக்கத்தான் கீரை                       -           2 கப் 
  2. புழுங்கல் அரிசி                                -          1 கப் 
  3. உளுந்து                                               -          1 டீஸ்பூன் 
  4. வெந்தயம்                                          -           1 டீஸ்பூன் 
  5. துவரம் பருப்பு                                   -           2 டீஸ்பூன் 
  6. எண்ணெய்                                          -           தேவையான அளவு 
  7. உப்பு                                                       -            தேவையான அளவு


செய்முறை :
  • முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • அரிசி , உளுந்து , துவரம் பருப்பு , வெந்தயம் அனைத்தையும் கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும் .
  • 1 மணி நேரம் கழித்து அணைத்தையும்  சேர்த்து தோசைமாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  • மாவு பாதி அளவுக்கு அரை பட்ட பிறகு கழுவி நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
  • பிறகு கரைத்த மாவை 7 முதல் 8 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.
  • புளித்த மாவை எடுத்து தோசை கல்லில் 1 கரண்டி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
  • சூடான , சுவையான ,உடலுக்கு ஆரோக்கியம்  தரக்கூடிய முடக்கத்தான் தோசை தயார்.