Wednesday, December 27, 2017

சுமங்கலி பெண்கள் குங்குமம் இட்டு கொள்வது மிகவும் அழகு

                         சுமங்கலி பெண்கள் குங்குமம் இடுவதன் சிறப்பு 


Related image



  • சுமங்கலி பெண்களின் தலைவகுட்டுக்கு சீமந்தபிரதேசம் என்ற பெயர் உண்டாம்.


  • பெண்களின் சீமந்த பிரதேசம் எனப்படும் இந்த இடம் ஸ்ரீ மகா லெட்சுமியின் இருப்பிடமாகும்.


  • சுமங்கலி பெண்களின் சக்தியானது குங்குமத்தில் இருக்கிறதாம்.


  • ஸ்ரீ அம்பிகையின் வகுட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கிறதாம்.


  • வீட்டிற்கு வர கூடிய சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் கொடுப்பது நம் தமிழ் வழக்கம்.


  • அவ்வாறு கொடுக்கும் முன் பெண்கள் தான் குங்குமம் இட்ட பிறகே பிறருக்கு கொடுக்க வேண்டுமாம்.


  • இவ்வாறு குங்குமம் கொடுப்பதால் குங்குமம் கொடுப்பவர்  பெறுபவர் என இருவறுக்கும் பலன் அதிகம் கிடைக்குமாம்.


  • தெய்வீக தன்மை கொண்ட குங்குமத்தை நாம் இட்டு கொள்வதால் உடலில் குளிர்ச்சி ஏற்படுமாம்.


  • அது மட்டும் இன்றி குங்குமம் இட்டு கொண்டு இருக்கும் எவரையும் பார்பவருக்கு வசியம் செய்யும் எண்ணம் வராதாம்.


  • குங்குமம் இட்டு கொள்வதால் மனதில் நல்ல எண்ணங்கள் (positive thinking) தோன்றுமாம்.


  • குங்குமம் இட்டு கொள்வதால் சுய கட்டுபாடு (மனதை கட்டுக்குள் வைக்க) செய்ய முடியுமாம்.


  • அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை குறிக்குமாம். எனவே பெண்களின்  திருமண புடவையானது அரக்கு நிறத்தில் இருப்பது மிக சிறப்பாம்.


  • ஆண்கள் தன் இரு புருவங்களையும் இணைத்தார் போல் குங்குமம் இடவேண்டுமாம்.


  • இவ்வாறு இட்டு கொள்வது அவர்களின் தன் நம்பிக்கையை குறிக்குமாம்.