Wednesday, May 13, 2020

முடக்கத்தான் கீரை தோசை 







தேவையான பொருள்கள் :
  1. முடக்கத்தான் கீரை                       -           2 கப் 
  2. புழுங்கல் அரிசி                                -          1 கப் 
  3. உளுந்து                                               -          1 டீஸ்பூன் 
  4. வெந்தயம்                                          -           1 டீஸ்பூன் 
  5. துவரம் பருப்பு                                   -           2 டீஸ்பூன் 
  6. எண்ணெய்                                          -           தேவையான அளவு 
  7. உப்பு                                                       -            தேவையான அளவு


செய்முறை :
  • முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • அரிசி , உளுந்து , துவரம் பருப்பு , வெந்தயம் அனைத்தையும் கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும் .
  • 1 மணி நேரம் கழித்து அணைத்தையும்  சேர்த்து தோசைமாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  • மாவு பாதி அளவுக்கு அரை பட்ட பிறகு கழுவி நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
  • பிறகு கரைத்த மாவை 7 முதல் 8 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.
  • புளித்த மாவை எடுத்து தோசை கல்லில் 1 கரண்டி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
  • சூடான , சுவையான ,உடலுக்கு ஆரோக்கியம்  தரக்கூடிய முடக்கத்தான் தோசை தயார். 

Tuesday, May 12, 2020

அவல் தோசை

அவல் தோசை 





தேவையான பொருள்கள் :

  1. இட்லி அரிசி                      -      2 கப் 
  2. அவல்                                   -      1 கப் 
  3. புளித்த தயிர்                     -       1 கப் 
  4. உப்பு                                      -       தேவையான அளவு 
  5. எண்ணெய்                         -       தேவையா அளவு 

செய்முறை :

  • அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அவலில் கல் , மண் இருந்தால் தண்ணீரில் கழுவி புளித்த தயிரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு அரிசி , தயிர் இரண்டையும் கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்க்கு அரைத்து கொள்ளவும். 
  • அரைத்த மாவை உப்பு சேர்த்து கரைத்து 5 முதல் 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  • புளித்த மாவை எடுத்து தோசை கல்லில் எண்ணெய் விட்டு தோசைகளாக வார்த்து எடுத்து கொள்ளவும்.
  • சூடான ,சுவையான , சத்து நிறைந்த அவள் தோசை தயார்.



Saturday, May 9, 2020

சிறு தானிய தோசை


சிறு தானிய தோசை 





தேவையான பொருட்கள் :

  1. வரகு , கம்பு , சோளம்                                                -       தலா 1/2 கப் 
  2. உளுந்து                                                                           -      3/4 கப் 
  3. துவரம் பருப்பு                                                              -       1 கைப்பிடி 
  4. வெந்தயம்                                                                     -       1/2 டீஸ்பூன் 
  5. உப்பு                                                                                 -      தேவையான அளவு   


செய்முறை :      

  •  தானியங்கள் , பருப்புகள்  , வெந்தயம்  அனைத்தையும் நன்கு கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
  • கரைத்த மாவை 6 மணி நேரம் புளிக்க வைத்து கொள்ளவும்.
  • பிறகு தோசை கல்லில் தோசைகளாக வார்த்து எடுத்து கொள்ளவும்.
  • சூடான , சுவையான , சத்து நிறைந்த சிறு தானிய தோசை தயார்.
  • இதனுடன் தேங்காய்  சட்னி , கார சட்னி , மிளகாய் பொடியுடன் பரிமாறவும்.