சிறு தானிய தோசை
தேவையான பொருட்கள் :
- வரகு , கம்பு , சோளம் - தலா 1/2 கப்
- உளுந்து - 3/4 கப்
- துவரம் பருப்பு - 1 கைப்பிடி
- வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- தானியங்கள் , பருப்புகள் , வெந்தயம் அனைத்தையும் நன்கு கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
- பிறகு கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- கரைத்த மாவை 6 மணி நேரம் புளிக்க வைத்து கொள்ளவும்.
- பிறகு தோசை கல்லில் தோசைகளாக வார்த்து எடுத்து கொள்ளவும்.
- சூடான , சுவையான , சத்து நிறைந்த சிறு தானிய தோசை தயார்.
- இதனுடன் தேங்காய் சட்னி , கார சட்னி , மிளகாய் பொடியுடன் பரிமாறவும்.