சாமையரிசி எலுமிச்சை சாதம்
தேவையான பொருள்கள் :
செய்முறை:
தேவையான பொருள்கள் :
- சாமையரிசி - 2 கப்
- எலுமிச்சை - 2
- கடுகு,உளுந்து - 1 டீஸ்பூன்
- க.பருப்பு - 1/2 கைப்பிடி
- து.பருப்பு - 1/2 கைப்பிடி
- வறுத்த வேர்க்கடலை - 1/2 கைப்பிடி
- முந்திரி - 10
- ப.மிளகாய் - 2 (காரத்துக்கு ஏற்ப )
- மசால்தூள் - 1டீஸ்புன்
- நல்லெண்ணெய் - 1 குளிக்கரண்டி
- பெருங்காயம் - 1/2 டீஸ்புன்
- உப்பு - தேவையான அளவு
- மல்லி தலை - சிறிதளவு
செய்முறை:
- சாமை அரிசியை கழுவி வேகவைத்து கொள்ளவும்.
- ஒரு தட்டில் சத்தத்தை கொட்டி ஆறவைக்கவும்.
- அடுப்பில் கடாயி வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, க.பருப்பு, து.பருப்பு, முந்திரி, வேர் கடலை, ப.மிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயம் போட்டு நன்கு வறுக்கவும்.
- பிறகு எலுமிச்சை சாறை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- பிறகு ஆறவைத்த சாமை சத்தத்துடன் சேர்த்து கிளறி மல்லி தலை தூவி பரிமாறவும்.
- சுவையான சாமை எலுமிச்சை சாதம் தயார்.