தினை மாவு
தேவையான பொருள்கள்:
தேவையான பொருள்கள்:
- தினை மாவு - 2 கப்
- நெய் - 50 கி
- மண்டை வெல்லம் - 2 கப்
- ஏலப்பொடி - 1 டீஸ்புன்
- முந்திரி - 20
- பால் - 1/4 கப்
- உப்பு - 1 சிட்டிகை
செய்முறை :
- தினை அரிசியை வறுத்து, நைஸாக பவுடர் போன்று பொடித்து வைத்து கொள்ளவும்.
- கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து வைத்து கொள்ளவும்.
- தினை மாவில் பொரித்த முந்திரி, ஏலப்பொடி, உப்பு, பால் சேர்த்து ரவா லட்டு பதத்தில் உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
- சுவையான, சத்து நிறைந்த தினை லட்டு உருண்டை தயார்.
குறிப்பு:
- தினை இனிப்பு நெய் உருண்டையில் அதிக புரத சத்து உள்ளது.
- பெண்கள் அதிலும் பூப்பெய்திய இளம் பெண்களுக்கு இது நல்லதொரு ஊட்ட சத்து மிக்க தின்பண்டம்.