Tuesday, October 15, 2019

கம்பு கொழுக்கட்டை




தேவையான பொருள்கள்:

  1. கம்பரிசி                                     -      1கப் 
  2. வெங்காயம்                              -      1/2 கப் 
  3. ப.மிளகாய்                                 -      3
  4. கருவேப்பிலை                         -      2  கொத்து 
  5. தேங்காய் துருவியது             -      1/ கப் 
  6.  உப்பு                                          -        தேவையான அளவு 
  7. எண்ணெய்                               -        3 டீஸ்பூன் 
  8. கடுகு,உளுந்தம் பருப்பு        -         1  டீஸ்பூன்
  9. க.பருப்பு                                   -         2 டீஸ்பூன்

செய்முறை:
  • கம்பரிசியை கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு கம்பை மிக்சியில் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
  • அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, கடலை பருப்பு, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  •  வெங்காயம் வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்து வைத்துள்ள கம்பு மாவை சேர்த்து கிளறவும்.
  • மாவில் பச்சை வாசம் போகும் வரை அடிபிடிக்காமல் கிளறி இறக்கவும்.
  • மாவு ஆறியதும் கொழுக்கட்டைகளாக (படத்தில் காட்டியவாறு) பிடித்து கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் சூடானதும் இட்லி தட்டில் பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டையை வைத்து 10 நிமிடங்கள் முடி போட்டு வேக வைத்து கொள்ளவும்.
  • 10 நிமிடம் கழித்து இட்லி பாத்திரத்தை திறந்து கொழுக்கட்டையை எடுத்து சூடாக பரிமாறவும்.
  • சூடான, சுவையான,சத்து நிறைந்த கம்பு கொழுக்கட்டை தயார்.