நமது பாரம்பரிய உணவு முறையில் சிறுதானியத்தின் பயன்கள் :
1.தினை :
2.கம்பு :
3.சாமை :
4.வரகு :
5.கேழ்வரகு :
6.குதிரை வாலி :
7.சோளம் :
1.தினை :
- உடலில் கப ஆதிக்கம் அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படுகிறது.
- தினையை நம் உணவில் சேர்த்து கொள்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.
2.கம்பு :
- மற்ற தானியங்களை விட கம்பு அதிக புரத சத்துமட்டுமல்லாது அமினோ அமிலத்தையும் அதிகம் பெற்றுள்ளது.
- போதிய அளவு மாவுச்சத்தும் அதிக ருசியையும் கொடுக்கக்கூடியது.
- கொழுப்பும், வைட்டமின்களும், தாது உப்புக்களும் இத்தானியத்தில் நிறைந்துள்ளன.
- மேலும் இரத்த அபிவிருத்திக்கான இரும்பு சத்து மற்ற தானியங்களை விட இதில் அதிக அளவு உள்ளது.
3.சாமை :
- உடல் அசதி மற்றும் தளர்ச்சியை போக்கி சுறுசுறுப்பு தரும்.
- எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும்.
- இதை தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படம்.
- குறிப்பாக முதுகுவலி குறையும்.
4.வரகு :
- வரகில் அதிக அளவு லெசித்தின், நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது.
- மேலும் இதில் பி – வைட்டமின்கள் குறிப்பிடும் படியாக நியாசின மற்றும் ஃபோலிக் ஆசிட், தாது உப்புக்கள் கால்சியம், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.
- வரகு உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்லதொரு உணவாகும்.
- சீரான எடைக் குறைப்பதற்கும் உதவும்.
- உடல் பருமனால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு நல்லதொரு தீர்வாகும்.
5.கேழ்வரகு :
- கேழ்வரகில் உள்ள மாவுச்சத்து மெதுவாக சர்க்கரையாக மாறும் தன்மை உள்ளதால், கேழ்வரகினை உண்பதால் நீரழிவு நோய் வராமல் இருக்கவும்.
- நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
- மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் ஜீரண சக்தியை அதிகமாக்கவும், இரத்ததில் உள்ள தேவையில்லாத சர்க்கரை மற்றும் கொழப்பு பொருட்களின் செரிமானத்திற்கு உதவுகிறது
6.குதிரை வாலி :
- நார் சத்து மிகுதியாக காணப்படுவதால் நமது உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும், செரித்தலின் போது இரத்தத்திலிருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது.
- ஆகவே இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாக பயன்படுகிறது.
7.சோளம் :
- தானியம் உணவாகவும், உலர்ந்த சோளத்தட்டை கால்நடை தீவனமாகவும் பயன்படுகிறது.
- சோளத்தில் உடலுக்கு தேவையான ஆற்றல், புரதம், உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுஉப்புகள் அதிகளவில் இருக்கின்றன.
- மேலும் சோளம் இதய நோய்கள், இரத்தக் கொதிப்பு மற்றும் நீரழிவு நோயை குறைக்கும்.