Saturday, October 19, 2019

தினை லட்டு



தேவையான பொருள்கள்:


  1. தினை அரிசி                    -           1 கப் 
  2. பாசிப்பருப்பு                    -            1/4 கப் 
  3. கருப்பட்டி                        -            3/4 கப் 
  4. நெய்                                  -            தேவையான அளவு 
  5. முந்திரி                             -          10
  6. திராட்சை                         -           5
  7. ஏலக்காய்                         -           3

செய்முறை:

  • தினைஅரிசியை சுத்தம் செய்து வெறும் கடாயில் சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பாசிப்பருப்பையும் அதே போல் வறுத்து கொள்ளவும். சூடு ஆற விட்டு மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும்.
  • கடாயில்  1/2 கப் தண்ணீர், கருப்பட்டி இரண்டும்  சேர்த்து நன்கு கரையும் வரை   கொதிக்க  வைக்கவும்.
  •  தண்ணீர் நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து  வடிக்கட்டி கொள்ளவும்.
  • நெய்யை  கடாயில் ஊற்றி காய்ச்சி கொள்ளவும்.
  • முந்திரி, திராட்சையை நெயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • ஏலக்காயை பொடித்து வைத்து கொள்ளவும்.
  • கருப்பட்டி காய்ச்சிய தண்ணீரில், அரைத்து வைத்துள்ள தினை,பாசிப்பருப்பு மாவை  போட்டு கலந்து கொள்ளவும்.
  • பிறகு காய்ச்சி வைத்துள்ள நெய்யை சிறிது சிறிதாக கலந்து வைத்துள்ள மாவில்  ஊற்றி  லட்டு பிடிக்கும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • லட்டு பிடிக்கும் பதம் வந்ததும் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, பொடித்து வைத்துள்ள  ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பிறகு அனைத்து மாவையும் நமக்கு தேவையான அளவில் உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  • இப்போது சுவையான,சத்து நிறைந்த தினை லட்டு தயார்.